Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, December 16, 2011

அதே நான்.. வேறு நீ...

மெல்லியதோர் புன்னகையால்
மனதைக்கீறியவள் நீ
நீதான்
நீ மட்டும்தான் என்றிருந்தேன்
நீதான்
நீ மட்டுமே என்றானாய்..


இப்போது நீ
அதே நான்
ஆனால்
வேறு நீ
அதே நான்..

எப்போதும் போலவே
அதே நான்
வேறு நீ
வேறு வேறுதான் என்றாலும்
மாறாத காதல் நான்
மாறும் போதை நீ..


கிளைகளைத் தாண்டிய பறவையொன்று
காற்றின் திசைகளால்
காலத்தினை கடக்கிறது
கடல் கடந்து..

Monday, April 25, 2011

முதலும்.. முடிவும்...



முதல் பார்வையிலேயே 
உன்னை காதலிக்கும் தீர்மானத்தை
என்
நெஞ்சத்தில் எழுதி வைத்தேன் ..

பிரத்யோகமான முயற்சிகளால்
நம் சந்திப்புகளை
ஏற்படுத்திய நண்பர்களுக்காய்
கணிசமாக கரைந்தது
அப்பன் சொத்து..

உனக்கும் என்னை
பிடிக்க ஆரம்பித்தபின்
விருப்பங்களை தோள் மாற்றி
சுமக்கத் துவங்கினோம்..
 

புரிதலற்ற ஒரு விவாதத்தின் 
முடிவில்
தயாரானது
நம் காதலுக்கான இறுதி ஒப்பந்தம்..

Sunday, July 11, 2010

ஒரு அறிமுகம்..

மதிப்பிற்குரிய வலையுலக நண்பரகளே..

இன்றுமுதல் நானும் உங்களில் ஒருவனாகிறேன்.. இதுவரைக்கும் உங்கள் படைப்புகள் அனைத்தையும் தவறாமல் படித்து வந்திருக்கிறேன்..

ஒருநாள் நாமும் நம் எண்ணங்களை எழுதினால் என்ன? எனத் தோன்றியது..

களத்தில் நானும் இறங்கிவிட்டேன்.. நிறைகுறைகளை அவசியம் சுட்டிக்காட்டி என்னை மேம்படுத்திக் கொள்ள உதவ வேண்டும்..

அன்புடன்..
ரமேஷ் வீரா..