Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, December 16, 2011

அதே நான்.. வேறு நீ...

மெல்லியதோர் புன்னகையால்
மனதைக்கீறியவள் நீ
நீதான்
நீ மட்டும்தான் என்றிருந்தேன்
நீதான்
நீ மட்டுமே என்றானாய்..


இப்போது நீ
அதே நான்
ஆனால்
வேறு நீ
அதே நான்..

எப்போதும் போலவே
அதே நான்
வேறு நீ
வேறு வேறுதான் என்றாலும்
மாறாத காதல் நான்
மாறும் போதை நீ..


கிளைகளைத் தாண்டிய பறவையொன்று
காற்றின் திசைகளால்
காலத்தினை கடக்கிறது
கடல் கடந்து..

Monday, April 25, 2011

முதலும்.. முடிவும்...



முதல் பார்வையிலேயே 
உன்னை காதலிக்கும் தீர்மானத்தை
என்
நெஞ்சத்தில் எழுதி வைத்தேன் ..

பிரத்யோகமான முயற்சிகளால்
நம் சந்திப்புகளை
ஏற்படுத்திய நண்பர்களுக்காய்
கணிசமாக கரைந்தது
அப்பன் சொத்து..

உனக்கும் என்னை
பிடிக்க ஆரம்பித்தபின்
விருப்பங்களை தோள் மாற்றி
சுமக்கத் துவங்கினோம்..
 

புரிதலற்ற ஒரு விவாதத்தின் 
முடிவில்
தயாரானது
நம் காதலுக்கான இறுதி ஒப்பந்தம்..

Thursday, February 3, 2011

யாத்திரையின் முடிவில்

யாசிக்க முடியாத காதலை
சுவாசித்துக்கொண்டிருப்பவன்
நான்..
இன்னும்
யோசித்துக்கொண்டிருக்கிறாய்
நீ..

தவிர்க்க முடியாத
சந்திப்பில்
தலை திருப்பிக்கொண்டாலும்
நினைப்பில் நானிருப்பேன்
மறுக்கமுடியுமா?

நீ..
என் பாதைக்கு திரும்பும்
காலம்
நான்..?

யாத்திரையின் முடிவில்
அன்பின் துயரம்..

Friday, August 6, 2010

நான் இழந்த நட்பு .................

எனக்கு முன் உருவாகி

எனக்கு முன் உதிர்ந்ததேன் ..

ரோமங்கள் சிலிர்க்கின்றன

இதயங்கள் மௌனமாய் அழுகின்றன

கண்ணீரில் வார்தைகள் கரைந்து போகின்றன ...

நிகழ்காலம் எதிகாலம் இரண்டையும் இறந்தகாலம் ஆக்கிவிட்டு

நிறைந்த நித்திரையில் நீ ........

மீளா துயரில் நான் .............

உன்னோடு சண்டையிட்ட காலத்தயும்

சமாதனமான நேரத்தையும்

அன்பு கொண்ட பொழுதுகளும்

வம்பு வளர்த்த இரவுகளும் ....

தொண்டை வரை வந்து தொந்தரவு செயுதுடா ............

மலராய் மலர்ந்த உன் புன்னகைக்கு .........

மலர்களால் அஞ்சலி ...................

கவிதையாய் ஜொலித்த நம் நட்புக்கு ..........

கண்ணீரால் அஞ்சலி ...........................

Wednesday, July 14, 2010

மழையும்.. காதலும்..



















ஒரு குடையின் கீழ்
நாம் இருவரும்
குடை மறைத்த பாதியும்
மழை நனைத்த மீதியுமாய்
நனைய..
நனைய...
ஈரமான மனதை
இறுக்கிப் பிழிந்தது
நம் காதல்..

மழை முடிந்து
குடை சுருக்கியபின்னும்
விடை பெற்று
வீடு வந்த பின்னும்
வெளியில் விட்ட மழை
மனதில்
பெய்துகொண்டே இருக்கிறது..

ஷவரில் குளிக்கிறேன்
எனக்கு மட்டுமான
செயற்கை மழை ..


என்னோடு நீயும் கற்பனைக்
குளியல்..


உன் வீட்டிலும்
அப்படித்தானா?...